தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜம்மு காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி கைது

ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி தாரிக் அகமது பாட் ஜம்மு காஷ்மீர் காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டார்.

By

Published : Dec 10, 2020, 7:30 AM IST

காஷ்மீரின் புட்காம் பகுதியில், புதன்கிழமை (டிச. 11) காவல் துறையினர் மேற்கொண்ட சோதனையின்போது ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி தாரிக் அகமது பாட் கைதுசெய்யப்பட்டார்.

அப்போது, பயங்கரவாதி தாரிக் அகமது பாட்டிடமிருந்து துப்பாக்கி, வெடிமருந்துகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், துப்பாக்கி, வெடிமருந்துகள், பயங்கர ஆயுதங்கள் தாரிக் அகமது பாட்டிடமிருந்து கைப்பற்றப்பட்டன என்றனர்.

கடந்த நவம்பர் 30ஆம் தேதியன்று, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் கூட்டாளர் ஒருவரை குப்வாரா பகுதியில் வைத்து ஜம்மு காஷ்மீர் காவல் துறையினர் கைதுசெய்தனர். அவரிடமிருந்து கையெறி குண்டு, மூன்று லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் உள்ளிட்டவை பறிமுதல்செய்யப்பட்டன.

கடந்த மாதத்தில் (நவம்பர்) ஜம்மு காஷ்மீரின் நாக்ரோட்டா பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடித் தாக்குதலில் நான்கு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டனர். அப்போது, அவர்களிடமிருந்து பயங்கர ஆயுதங்கள், 11 ஏகே 47 ரிஃபிள்ஸ், மூன்று துப்பாக்கிகள், 29 கையெறி குண்டுகள் பறிமுதல்செய்யப்பட்டன.

ABOUT THE AUTHOR

...view details