தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜம்மு காஷ்மீரில் தொடரும் அதிரடி - ஜம்மு காஷ்மீரில் தொடரும் அதிரடி

பயங்கரவாதி
பயங்கரவாதி

By

Published : Mar 15, 2020, 8:46 PM IST

Updated : Mar 15, 2020, 9:00 PM IST

16:29 March 15

ஸ்ரீநகர்: ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் வடக்கு காஷ்மீர் பகுதியில் கைது செய்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் சோப்பூர் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாடுவதாக காவல்துறையினருக்கு நம்பதகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, மத்திய ஆயுத காவல் படை, பயங்கரவாத எதிர்ப்பு படையான 52 ராஷ்டிரிய ரைபிள் ஆகியவை இணைந்து அதிரடி சோதனையில் இறங்கியது. அப்போது, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவரை பாதுகாப்பு படையினர் சோப்பூர் பகுதியில் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர் பாரமுல்லா மாவட்டத்தைச் சேர்ந்த தானிஷ் அகமது கக்ரு என்பது அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த அதிரடி நடவடிக்கையின்போது அவர் தப்பி செல்ல முயற்சித்தாகக் கூறப்படுகிறது.  

சமீபத்தில்தான் அவர் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அகமது கக்ருவிடமிருந்து பயங்கர ஆயுதங்கள், வெடி மருந்துகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதையும் படிங்க: வீட்டு சிறையில் இருக்கும் தலைவர்களை மீட்க ஒன்றிணையுங்கள் - ஃபருக் அப்துல்லா கோரிக்கை

Last Updated : Mar 15, 2020, 9:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details