ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் காரில் வெடிகுண்டு வைத்து வெடிக்க வைக்க நினைத்த பயங்கரவாதிகளின் சதித்திட்டம் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை, காவல் துறையினர் எடுத்த துரித நடவடிக்கையால் முறியடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து காஷ்மீர் ஐஜி விஜயகுமார் கூறுகையில், ”ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பில் உள்ள ஒரு பயங்கரவாதி இந்த சதிவேலையை செய்யப்போவதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. காவல் துறையினர் புல்வாமா சோதனைச் சாவடியில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கே வந்த கார் ஒன்று காவலர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து காரை பாதுகாப்பு வீரர்கள் தடுத்து நிறுத்தியபோது, காருக்குள் இருந்த ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார்.
பின்னர் அதை அப்புறப்படுத்தி ஆள்நடமாட்டம் இல்லாத வேறொரு இடத்தில் வைத்து வெடிக்க வைத்தோம். சரியான நேரத்தில் காவலர்கள் எடுத்த துரிதமான செயல்பாட்டால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த விவகாரத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக நாங்கள் சந்தேகம் அடைகிறோம்.