தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த ஆந்திர முதலமைச்சர் - jegan mohan reddy meets pm modi

டெல்லி: ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து 'ஒய்.எஸ்.ஆர். ரைது பரோசா' திட்டத்தின் தொடக்க விழாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

jegan mohan reddy

By

Published : Oct 6, 2019, 10:49 AM IST

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, ’ஒய்.எஸ்.ஆர். ரைது பரோசா‘ திட்டத்தை தொடங்கிவைக்க அழைப்புவிடுத்தார். சட்டப்பேரவை தேர்தலின் போது,ஜெகன் மோகன் அளித்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றான இத்திட்டம், அக்டோபர் 15ஆம் தேதி நெல்லூரில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் குத்தகைதாரர், விவசாயிகள் உட்பட 53 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பிரச்னைகள் குறித்தும் பிரதமருடன் ஒன்றரை மணி நேரம் ஒய்.எஸ்.ஆர். விவாதித்தார். அப்போது, மாநிலத்தின் வளர்ச்சிக்காக 40 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை பிரதமரிடத்தில் ஒய்.எஸ்.ஆர். கோரியுள்ளார்.

இதையும் படிங்க: ஆட்டோ ஓட்டுநர் கெட்டப்பில் கலக்கிய ஆந்திர முதலமைச்சர்!

ABOUT THE AUTHOR

...view details