டெல்லி: கரோனா வைரஸ் அச்சுறுத்தல் இந்தியாவில் படிப்படியாக குறைந்துவரும் நிலையில், பல்வேறு மாநிலங்களும் பள்ளி, கல்லூரிகளைத் திறக்க முடிவு செய்துள்ளன. இதையடுத்து மாணவர்களுக்கான தேர்வுகள் குறித்தும் ஆலோசனைகள் நடைபெறத் தொடங்கியுள்ளன.
டிசம்பர் 10ஆம் தேதி மத்திய கல்வித் துறை நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் மாணவர்களுக்கு பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ முதன்மைத் தேர்வு நடத்துவது குறித்து சாதகமான முடிவுகள் கிடைத்துள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ஜேஇஇ முதன்மைத் தேர்வு குறித்து இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அதில் தேர்வு அட்டவணை, எத்தனை முறை தேர்வுகள் நடைபெறும் உள்ளிட்டவை குறித்தும் தெரிவிக்க உள்ளதாகக் கூறியுள்ளார்.
முன்னதாக ஜேஇஇ தேர்வு தமிழ், கன்னடா, மராத்தி, குஜராத்தி உள்ளிட்ட 13 பிராந்திய மொழிகளில் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.