நாட்டின் உயர்நிலைக் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வான ஜேஇஇ தேர்வுகளை ஐஐடி டெல்லி நடத்தியது. இத்தேர்வினை எழுத 1.5 லட்சம் மாணவர்கள் பதிவு செய்தனர். இருப்பினும் 1.6 லட்சம் மாணவர்கள் மட்டுமே இத்தேர்வை எழுதினர். இந்நிலையில் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது.
ஜேஇஇ தேர்வில் முதலிடம் பெற்ற புனே மாணவர் - ஜேஇஇ
டெல்லி: ஜேஇஇ தேர்வு முடிவுகளை ஐஐடி வெளியிட்டுள்ள நிலையில், புனேவைச் சேர்ந்த மாணவன் முதலிடம் பெற்றுள்ளார்.
6,707 மாணவிகள் உள்பட 43 ஆயிரம் பேர் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. 396 க்கு 352 மதிப்பெண்கள் பெற்று புனேவைச் சேர்ந்த சீரக் பலோர் என்பவர் முதலிடம் பெற்றுள்ளார். விஜயவாடாவை சேர்ந்த கங்குலா புவன் இரண்டாவது இடத்தையும் பிகாரைச் சேர்ந்த வைபவ் ராஜ் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளார்.
மாணவிகளில் கனிஷ்கா என்பவர், 396க்கு 315 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். கரோனா பெருந்தொற்று காரணமாக ஜேஇஇ தேர்வுகள் செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்றது.