தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வு ஜூலை 3ஆம் தேதி நடத்தப்படும் - அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் - ஜே.இ.இ அட்வான்ஸ்டு தேர்வு ஜூலை 3ஆம் தேதி நடத்தப்படும்

டெல்லி : ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வு ஜூலை 3ஆம் தேதி நடத்தப்படும் என மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் இன்று (ஜன. 07) தெரிவித்தார்.

ஜே.இ.இ அட்வான்ஸ்டு தேர்வு  ஜூலை 3ஆம் தேதி நடத்தப்படும் - அமைச்சர்  ரமேஷ் பொக்ரியால்
மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க்

By

Published : Jan 7, 2021, 7:52 PM IST

இந்தியாவில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர ஜே.இ.இ. தேர்வுகளில் தேர்ச்சிபெற வேண்டும். அந்த வகையில், ஜே.இ.இ. முதன்மைத் தேர்வு, அட்வான்ஸ்டு தேர்வு என இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. இவர் இரண்டிலும் தேர்வாகும் மாணவர்களே மத்திய அரசின் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேர முடியும்.

இந்த ஆண்டுக்கான ஜே.இ.இ. முதன்மைத் தேர்வு கடந்த செப்டம்பர் 1ஆம் தேதிமுதல் 6ஆம் தேதி வரையில் நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கு நாடு முழுவதும் 10 லட்சத்து 66 ஆயிரம் பேர் பதிவுசெய்திருந்தனர். இவர்களில் 10 லட்சத்து 23 ஆயிரம் மாணவர்கள் தேர்வினை எழுதினர். அவர்களுக்கான தேர்வு முடிவுகள் செப்டம்பர் 11ஆம் தேதி வெளியிடப்பட்டது.

முதன்மைத் தேர்வுகளில் வெற்றிபெற்றவர்கள், அடுத்ததாக ஜே.இ.இ. பிரதான தேர்வை (அட்வான்ஸ்டு தேர்வு) எழுத வேண்டும். இந்தத் தேர்வில் தகுதிபெறும் மாணவர்களே இந்தியாவில் உள்ள ஐ.ஐ.டி.களில் சேர முடியும். இந்தாண்டுக்கான ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வு ஜூலை 3ஆம் தேதி நடத்தப்படும் மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் அறிவித்துள்ளார்.

மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க்

நடப்பு கல்வியாண்டுக்கான ஜே.இ.இ. முதன்மைத் தேர்வுகள் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே என நான்கு முறை நடத்தப்படும். முதற்கட்ட தேர்வு பிப்ரவரி 23-26 வரை சிபிடி முறையில் நடைபெறும்.

தமிழ், மலையாளம் உள்ளிட்ட 13 மொழிகளில் இந்தத் தேர்வு நடத்தப்படும். மாணவ-மாணவிகள் தங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுத்து, தேர்வை எழுதலாம் என மத்திய கல்வித் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

மொத்தமுள்ள 90 கேள்விகளில் (இயற்பியல், வேதியியல், கணிதத்தில் தலா 30 கேள்விகள்) மாணவர்களுக்கு 75 கேள்விகள் (இயற்பியல், வேதியியல், கணிதத்தில் தலா 25 கேள்விகள்) மட்டும் பதிலளிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :சிறுபான்மையினரின் நிலைமை மோசமடைந்துவருகிறது - மெகபூபா முஃப்தி

ABOUT THE AUTHOR

...view details