டெல்லி: ஐஐடி உள்ளிட்ட மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக நாடு முழுவதும் ஜேஇஇ மெயின், ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வுகள் நடைபெறும். 12ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதிகளைக் கொண்ட மாணவர்கள் ஜேஇஇ முதன்மைத் தேர்வுகளில் தேர்ச்சிப் பெற்றால் அவர்கள் ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வினை எழுத முடியும்.
இந்நிலையில், இந்தியாவில் ஜேஇஇ அட்வான்ஸ் தேர்விற்கான தேதி எப்பொழுது அறிவிக்கப்படும் என மத்திய கல்வித் துறை அமைச்சர் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதில், ஐஐடி உள்ளிட்ட மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்க்கைக்காக நடைபெறவிருக்கும் ஜேஇஇ தேர்வு நடைபெறும் தேதியினை வரும் 7ஆம் தேதி அறிவிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தேர்வு குறித்த கூடுதல் தகவல்களையும் அவர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜேஇஇ தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்கள், அவர்களின் தரவரிசை அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கான இருக்கை ஒதுக்கீடு செய்யப்படும்.
இதையும் படிங்க: ஜே.இ.இ முதன்மைத் தேர்வு குறித்து மத்திய அரசின் புதிய அறிவிப்பு!