குவாலியர் (மத்தியப் பிரதேசம்): அரசு அலுவலர்கள் டீ-ஷர்ட், கிழிந்த ஜீன்ஸுகள் அணியக்கூடாது என்று குவாலியர் மண்டல ஆணையர் ஓஜா உத்தரவிட்டுள்ளார்.
ஊழியர்கள் அனைவரும் நேர்த்தியான ஃபார்மல் உடையணிந்து பணிக்கு வரும்படி அறிவுறுத்தியுள்ளார். உத்தரவை மீறினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். இது குறித்த சுற்றறிக்கை அனைத்து உயர் அலுவலர்களுக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் அனுப்பப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.