தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாஜக கூட்டணியில் குழப்பம்? - ஐக்கிய ஜனதா தளம்

பாட்னா: ஒரு அமைச்சர் பதவி தந்ததால் பாஜக அமைச்சரவையில் ஐக்கிய ஜனதா தளம் அங்கம் வகிக்காது என நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.

NDA

By

Published : Jun 2, 2019, 7:00 PM IST

மக்களவைத் தேர்தலில் பாஜக 303 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. இந்நிலையில் கூட்டணி கட்சிகளான சிவ சேனா, லோக் ஜனசக்தி, சிரோன்மணி அகாலி தளம் உள்ளிட்ட கட்சிகளுக்கு தலா ஒரு அமைச்சர் பதவி கொடுத்தது.

பீகார் மாநிலத்தில் 16 தொகுதிகளை வென்ற பாஜகக் கூட்டணி கட்சியான ஜக்கிய ஜனதா தளத்துக்கும் ஒரு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் இரண்டு அமைச்சர் பதவியை ஜக்கிய ஜனதா தளம் கேட்டதாகவும் அதனை பாஜக கொடுக்காததால் அமைச்சரவையில் அக்கட்சி இடம்பெற மறுப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. தற்போது இதுபற்றி ஜக்கிய ஜனதா தள கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர், "ஒரு அமைச்சர் பதவி கொடுத்ததால் நாங்கள் பாஜக அமைச்சரவையில் அங்கம் வகிக்க மாட்டோம் என்பதை தெரிவித்துள்ளோம். இது பெரிய பிரச்னை அல்ல. நாங்கள் சுமூகமான உறவில்தான் இருக்கிறோம்" என்றார்

ABOUT THE AUTHOR

...view details