கர்நாடகா மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூன் 25ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதற்கான தேர்தல் ஜூன் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இரண்டு இடத்தில் பாஜகவின் வெற்றி உறுதியான நிலையில், மூன்றாவது இடத்திற்கு காங்கிரஸ் சார்பில் அதன் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.
மாநிலங்களவைத் தேர்தல்: மனுத்தாக்கல் செய்த முன்னாள் பிரதமர் - தேவ கவுடா மனு தாக்கல் செய்தார்
பெங்களூரு: முன்னாள் பிரதமர் தேவ கவுடா மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில், இன்று மனு தாக்கல் செய்தார்.
தேவ கவுடா
இதனிடையே, நான்காவது இடத்திற்கு முன்னாள் பிரதமர் தேவ கவுடா போட்டியிடுவார் என மதச்சார்பற்ற ஜனதா தளம் அறிவித்தது. இந்நிலையில், தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தேவ கவுடா இன்று தாக்கல் செய்தார். பாஜகவின் வெற்றியை தடுக்கும் நோக்கில் மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு காங்கிரஸ் ஆதரவு தந்துள்ளது.
இதையும் படிங்க: முன்னாள் மத்திய அமைச்சர் சிந்தியாவுக்கு கரோனாவா
?