கர்நாடக மாநில மஜத தலைவராக இருப்பவர் முதலமைச்சர் குமாரசாமி. இவரது மகன் நிகில் கவுடா. மக்களவைத் தேர்தலில் மாண்டியா தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைச் சந்தித்தார். இந்நிலையில், மஜதவில் அவருக்கு முக்கியப் பொறுப்பு வழங்கும் நிகழச்சி பெங்களூருவில் இன்று நடைபெற்றது. இதில் மஜத மாநில இளைஞரணி தலைவராக நிகில் கவுடாவை தேர்ந்தெடுத்துள்ளதாக, அக்கட்சியின் முன்னாள் மாநில தலைவர் விஸ்வநாத், முன்னாள் பிரதமர் தேவகவுடா ஆகியோர் கூட்டாக அறிவித்தனர்.
பதவி வழங்குவதில் ஸ்டாலினை முந்திய கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி - Youth wing president
பெங்களூரு: மஜத மாநில இளைஞரணி தலைவராக அம்மாநில முதலமைச்சர் குமாரசாமியின் மகன் நிகில் கவுடா தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.
அப்பா மாநில தலைவர் பதவியிலும், மகன் மாநில இளைஞரணி தலைவர் பதவியிலும் இருப்பது அம்மாநில அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மஜத மக்களுக்கான கட்சி என்று அறிவித்து வரும் முதலமைச்சர் குமாரசாமி, முக்கிய பொறுப்பை மகனுக்கு வழங்கியுள்ளது கட்சி தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல் திமுக தலைவர் ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலினை, மாநில இளைஞரணி தலைவராக இன்று அறிவிப்பார் என தகவல் வெளியான நிலையில், கர்நாடக மாநில முதலமைச்சர் முந்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.