பிகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. 243 தொகுதிகளைக் கொண்ட பிகார் மாநிலத்திற்கு இந்த ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.
பிகாரில் கட்சிகள் மேற்கொள்ளவிருந்த பரப்புரைகள் கரோனா வைரஸ் பரவல் காரணமாக தடைப்பட்டிருந்தன. இந்நிலையில், ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவரும், பிகார் முதலமைச்சருமான நிதிஷ் குமார் இன்று பரப்புரையைத் தொடங்கியுள்ளார். இன்று தொடங்கி வரும் ஜூன் 12ஆம் தேதிவரை தொடர்ந்து ஆறு நாள்களுக்கு காணொலி வாயிலாக கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்கிறார்.