மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாள் விழா தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி புதுச்சேரி அதிமுக சார்பில் உப்பளத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் உருவப் படத்திற்கு அன்பழகன் தலைமையில் அதிமுகவினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதனைத்தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு தையல் இயந்திரம், தள்ளுவண்டி, மிக்சி, கிரைண்டர், லேப்டாப் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர் பாஸ்கர், மாநிலங்களவை உறுப்பினர் கோகுலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.