மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் நாட்டின் பல்வேறு பகுதியில் போராட்டம் நடத்திவருகின்றனர். குறிப்பாக, பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டுப் போராடிவருகின்றனர்.
18ஆவது நாளாகத் தொடரும் இந்தப் போராட்டத்திற்கான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், போராட்டம் தீவிரமடைந்துள்ளது. அதன்படி, இன்று விவசாய தலைவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அதுமட்டுமின்றி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வண்ணம் உண்ணாவிரதம் இருந்துவருகிறார்.