உலகளாவிய பெருந்தொற்று நோயான கோவிட்-19 பரவலைத் தடுக்கவும், பாதிப்பைக் கட்டுப்படுத்தவும் இந்திய அரசுக்கு கடனுதவி வழங்குவது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரத் துறை கூடுதல் செயலாளர் சி.எஸ். மோகாபத்ராவை ஜப்பானிய தூதர் சுசுகி சடோஷி சந்தித்து பேசியதாகத் தெரிகிறது.
இந்தச் சந்திப்பின்போது, இது தொடர்பாக கலந்துரையாடல் நடைபெற்றதாக ஜப்பான் தூதரகத்தின் அதிகாரப்பூர்வ தெரிவித்துள்ளது.
ஜப்பான் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்," ஜப்பானின் அதிகாரப்பூர்வமான வளர்ச்சி உதவி செயல்முறையின் (ஓடிஏ) கீழ் மூலம் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் அடிப்படையில் இந்தியாவுக்கு 1 பில்லியன் யென் (இந்திய மதிப்பில் 6.8 கோடி) வழங்கப்பட உள்ளது. ஆண்டுக்கு 0.01 சதவீதம் வட்டி விகிதம் என்ற கணக்கில் இந்த கடனுதவி வழங்கப்படும்.
ஜப்பானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த பங்களிக்கும் என ஜப்பான் கருதுகிறது.
இந்தியாவில் கரோனா பரவுவதைத் தடுக்கவும், நோயைக் கட்டுப்படுத்தவும், சுகாதார மற்றும் மருத்துவக் கொள்கையை மேம்படுத்துவதற்கும், ஐ.சி.யுக்கள் மற்றும் தொற்று தடுப்பு மற்றும் மேலாண்மை வசதிகளுடன் கூடிய மருத்துவமனைகளின் வளர்ச்சிக்கும் பயன்படுத்தப்படும்.
அதேவேளையில் ஏழைகளுக்கு உதவுவதற்கு, பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கு இந்த நிதி பயன்படுத்த அனுமதி வழங்கப்படுகிறது.
கரோனாவுக்கு எதிரான இந்தியாவின் அனைத்து செயல்களுக்கும் ஜப்பான் அரசு துணை நிற்கும்.
குறிப்பாக, இந்தியாவின் 800 மில்லியன் (8 கோடி) மக்களுக்கு அதாவது, வறுமைக் கோட்டிற்கு கீழே இருப்பவர்கள், விவசாயிகள், சுகாதாரத்துறை ஊழியர்கள், பெண்கள், முதியவர்கள், குறைந்த வருமானம் பெறுபவர்கள், கட்டிட தொழிலாளர்கள் என்று சமுதாயத்தில் பொருளாதார மற்றும் சுகாதார சிக்கலுக்கு உள்ளாகும் மக்களுக்கு உதவுவதற்கு ஜப்பான் தயாராக உள்ளது.
எதிர்காலத்திலும் இந்தியாவின் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கு, அரசின் திட்டங்களை கண்காணிக்க, மதிப்பீடு செய்ய சிறந்த கட்டமைப்புகளை உருவாக்க உதவி செய்வோம்" என்று ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.