தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 4, 2020, 5:55 PM IST

ETV Bharat / bharat

இந்தியாவுக்கு ஜப்பான் பக்கபலமாக இருக்கும்!

லடாக்கில், எல்லை பகுதியில், நிலைமையை மாற்றும் சீனாவின் முயற்சியை, ஜப்பான் கடுமையாக எதிர்க்கும். எல்லையில் அமைதியை ஏற்படுத்த, இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு, ஜப்பான் முழுமையாக ஆதரவு அளிக்கும் என இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் தெரிவித்துள்ளார்.

இந்திய சீன எல்லை பிரச்னை
இந்திய சீன எல்லை பிரச்னை

டெல்லி: லடாக்கில், எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில், நிலைமையை மாற்றும் சீனாவின் முயற்சியை கடுமையாக எதிர்ப்போம் என ஜப்பான் தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கான ஜப்பான் தூதர், சடோஷி சுசூகி, தனது ட்விட்டர் பக்கத்தில், லடாக்கில், சீன ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதல் குறித்து எழுதியிருந்தார்.

அதில், லடாக்கில், எல்லை பகுதியில், நிலைமையை மாற்றும் சீனாவின் முயற்சியை, ஜப்பான் கடுமையாக எதிர்க்கும். எல்லையில் அமைதியை ஏற்படுத்த, இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு, ஜப்பான் முழுமையாக ஆதரவு அளிக்கும். லடாக் எல்லைப் பிரச்னை குறித்து, இந்திய வெளியுறவு செயலர், ஹர்ஷ்வர்த்தன் ஷ்ரிங்லாவுடன் நடத்திய பேச்சு, திருப்திகரமாக இருந்தது.

எல்லை பிரச்னைக்கு தீர்வு காணும் இந்திய முயற்சிகளை, சீனா ஏற்க வேண்டும். இந்தியா - ஜப்பான் கடலோர காவல் படையைச் சேர்ந்த ரோந்து கப்பல்கள், ஜூன் 27ஆம் தேதி, இந்திய பெருங்கடலில், இணைந்து பயிற்சியில் ஈடுபட்டது மகிழ்ச்சியளிக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details