தூய்மை பாரதம் திட்டம் மூலம் ஈர்க்கப்பட்ட உத்தரகாண்ட் டேராடூன் மாவட்டத்திலுள்ள கேவால் விகார் காலனி மக்கள் சுத்தம் குறித்த ஆழ்ந்த விழிப்புணர்வு முயற்சியை மேற்கொண்டுவருகின்றனர். குப்பைகள் பிரிக்கும் முறையை கேவால் விகார் காலனி சரியாக அமல்படுத்திவருகிறது. இந்த முயற்சியை வீட்டிலிருந்து தொடங்க மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குப்பைகளைப் பிரித்தெடுத்து, அதனை உரமாக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
இதுகுறித்து காலினியில் வசிக்கும் ஆஷிஷ் கார்க், "அனைத்து வீடுகளுக்கும் சென்று குப்பைகள் பிரிக்கும் முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறோம். அதனை உரமாக மாற்றி பயன்படுத்துகிறோம். ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளைச் சேகரித்து அதனைச் சாலை போடுவதற்கு மக்கள் பயன்படுத்துகின்றனர். மேலும், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பெட்ரோலியத்திற்கு அனுப்பப்பட்ட பிளாஸ்டிக்குகள் டீசலை உற்பத்திச் செய்யப் பயன்படுகிறது" என்றார்.
ஆஷிஷின் இந்த முயற்சியை காலனி மக்கள் மேற்கொண்டு குப்பைகளைப் பிரித்து உரமாக மாற்றுவது மட்டுமில்லாமல், அதனைப் பயனுள்ளதாகவும் மாற்றுகின்றனர். பிளாஸ்டிக் இல்லா பகுதியாக உருவாக்கியதன் காரணமாக கிராம மக்களுக்கு சுத்தத்திற்கான பரிசை டூன் ஸ்மார்ட் சிட்டி வழங்கியுள்ளது. நாட்டின் மற்ற பகுதிகளுக்கு கேவால் விகார் காலனி முன்மாதிரியாக விளங்குகிறது.