தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

‘ஜனசக்தி’ ராஜ்மோகன் காலமானார்! - இந்திய கம்யூனிஸ்டு கட்சி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ வார இதழான ஜனசக்தியின் பொறுப்பாசிரியரும், மூத்த பத்திரிகையாளருமான வீ.ராஜ்மோகன் கரோனா பாதிப்பால் இன்று காலமானார்.

rajmohan
rajmohan

By

Published : Jan 30, 2021, 12:40 PM IST

ஜனசக்தி வார இதழின் பொறுப்பாசிரியரும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த நிர்வாகக் குழு உறுப்பினருமான வீ.ராஜ்மோகன்(78), சென்னை குரோம்பேட்டையில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் அவருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், கிண்டியில் உள்ள கோவிட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், இன்று அதிகாலை ராஜ்மோகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவையடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், அரசியல் இயக்கத்தினர் மற்றும் பத்திரிகையாளர் அமைப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: நாகை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மாரடைப்பால் உயிரிழப்பு!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details