தமிழ்நாடு

tamil nadu

பிளாஸ்டிக் பாட்டில் கொடு - தேநீரை தருகிறோம்!

By

Published : Jan 27, 2020, 1:00 PM IST

பெங்களூரு: பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் கர்நாடகாவில் இயங்கும் இந்திரா கேன்டீன்கள் பிளாஸ்டிக் பாட்டில்களை வாங்கிக் கொண்டு தேநீரை வழங்கிவருகிறது.

plastic
plastic

பிளாஸ்டிக் பயன்பாட்டை பெரியளவில் குறைக்க வேண்டுமென அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது. ஆனாலும் நாடு முழுவதும் பிளாஸ்டிக்குகளை ஒழிக்க முடியாமல் அரசும் தன்னார்வலர்களும் திணறிவருகின்றனர். பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு எதிராக நாடு முழுவதும் பரப்புரை செய்யப்பட்டுவருகிறது. ஆனால், அதற்கான மாற்றை மக்களிடையே கொண்டு சேர்க்காமல் பிளாஸ்டிக் ஒழிப்பு என்ற லட்சியத்தை அடைய முடியாது.

மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பிளாஸ்டிக்கால் ஏற்படும் மாசை குறைக்கும் நோக்கிலும் கர்நாடக மாநிலம் விஜயபுராவில் உள்ள இந்திரா கேன்டீன் பிளாஸ்டிக் பாட்டில்களை வாங்கிக் கொண்டு இலவசமாக தேநீரை வழங்கிவருகிறது. பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும் தூய்மையான சமுதாயத்தை உருவாக்கவும் நகராட்சி நிர்வாகம் இந்த புதுவித முயற்சியை மேற்கொண்டுள்ளது.

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் ஒரு கப் தேநீர்

இதுகுறித்து உள்ளூர்வாசியான பிரசாந்த் கூறுகையில், "பொது இடங்களில் பிளாஸ்டிக் பாட்டில்கள் வீசப்படும்போது சுற்றுச்சூழல் பிரச்னை உருவாகிறது. நான்கு பிளாஸ்டிக் பாட்டில்களைக் கொண்டு வந்து கொடுத்தால் நகராட்சி நிர்வாகம் இலவசமாக ஒரு கப் தேநீரை கொடுக்கிறது. பிளாஸ்டி்கை ஒழிக்க இது ஒரு நல்ல திட்டம், மாநிலங்களில் உள்ள ஒவ்வொரு மாவட்டமும் இதைப் பின்பற்ற விரும்புகிறேன். சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் பாட்டில்கள் சிமென்ட் தொழிற்சாலைக்கு அனுப்பப்படுகின்றன. மாவட்ட நிர்வாகத்தின் இந்தத் திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்" என்றார்.

இந்திரா கேன்டீன்களில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் பாட்டில்கள் பாகல்கோட்டில் உள்ள ஜே. கே. சிமென்ட் தொழிற்சாலைக்கு அனுப்பப்படுகிறது. அங்கு சிமெண்டில் கலக்கப்பட்டு அதன் தரத்தை உயர்த்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. சமீபத்தில், கடைகளிலிருந்து சுமார் 14 டன் பிளாஸ்டிக்கை மாநகராட்சி அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். திடக்கழிவை மேலாண்மை செய்யும் தளத்தில், தினமும் சுமார் 400 கிலோ பிளாஸ்டிக் சேகரிக்கப்படுகிறது.

இதையும் படிங்க: பாராட்டுக்குரிய பணியில் ஈடுபடும் பொறியாளர்!

ABOUT THE AUTHOR

...view details