தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாராட்டுக்குரிய பணியில் ஈடுபடும் பொறியாளர்! - பிளாஸ்டிக் ஒழிப்பில் பொறியாளர்

பெங்களூரு: பிளாஸ்டிக் கழிவுகளைச் சேகரித்து அதன் ஒழிப்பில் வீரப்பா அரகேறி என்ற பொறியாளர் பங்காற்றி வருகிறார்.

Plastic
Plastic

By

Published : Jan 26, 2020, 7:39 PM IST

பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் நோக்கில் கர்நாடக மாநிலம் ஹூப்ளியைச் சேர்ந்த பொறியாளர் மறு சுழற்சிக்கு உட்படுத்த முடியாத பிளாஸ்டிக்களுக்கு எதிராக தொடர் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். வீரப்பா அரகேறி என்ற மின் பொறியாளர் நகரத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து வருகிறார். பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள் குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

மாணவர்களுக்கு கணினி பயிற்சி அளிக்கும் அரகேறி தையல் வகுப்புகளையும் எடுத்து வருகிறார். பணம் சம்பாதிப்பதற்காக இப்படி பல பணிகளை அவர் செய்துவருகிறார். ஆனால், இப்பணத்தை சொந்த செலவுகளுக்காக அவர் பயன்படுத்துவதில்லை. பிளாஸ்டிக் கழிவுகளை வாங்கும் மக்களுக்கு அதற்குப் பதில் அரகேறி பணத்தைத் தருகிறார்.

இதுகுறித்து அரகேறி கூறுகையில், "பிளாஸ்டிக் அழிவை ஏற்படுத்துகிறது. நம் பணியை மட்டும் கவனித்தால், எதிர்கால சந்ததியினருக்கு என்ன ஆகும்? எனவேதான் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கத் தொடங்கினேன். கடந்த ஐந்து ஆண்டுகளாக இதனை செய்து வருகிறேன். ஹூப்ளி பகுதி பெண்கள் எனக்கு ஆதரவளித்து வருகிறார்கள். எங்களுக்காக மட்டுமில்லாமல் எதிர்கால சந்ததியினருக்கும் அவர்கள் உதவி வருகிறார்கள். சுற்றுச்சூழலுக்காக பங்காற்றிவருகின்றனர்" என்றார்.

அரகேறியை பாராட்டும் இல்லத்தரசி கீதா, "அவர் சிறப்பான பணியை ஆற்றிவருகிறார். குடும்பத்திடமிருத்து ஆதரவு கிடைக்காததால் மற்றவர்கள் இதனை செய்யமாட்டார்கள். கழிவுகளை சேகரிக்கும் பணியை செய்து வருவதால் மதிப்பு கிடைக்காது. இதுபோன்ற பல இன்னல்களைத் தாண்டி அவர் இப்பணியை செய்து வருகிறார். இதனை கருத்தில் கொண்டுதான் அவருடன் சேர்ந்து பணியாற்றி வருகிறோம்" என்றார்.

இதுகுறித்து மாயா ஜோஷி என்ற இல்லத்தரசி, "அவர் செய்யும் பணிகுறித்து எங்களைச் சந்தித்து விளக்கினார். அவருக்கு ஆதரவளிக்க ஒப்புக் கொண்டோம். பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. அதனைப் பார்க்கும்போது மனதளவில் வலி ஏற்படுகிறது. எனவே, இல்லத்தரசி பெண்களை ஒன்று திரட்டி வீரப்பாவுக்கு ஆதரவளிக்க முடிவெடுத்தோம்" என்றார்.

பாராட்டுக்குரிய பணியில் ஈடுபடும் பொறியாளர்
ஆனால், அரகேறி சிறிதளவு கூட சோர்வு அடையவில்லை. பின்னர், இவரின் முயற்சிகள் பயன் தருவதைக் கண்டு, மக்கள் இவருடன் சேர்ந்து செயல்படத் தொடங்கினர். அவரின் கோரிக்கையை ஏற்று பல இல்லத்தரசிகள் மக்கும் குப்பைகள், மக்கா குப்பைகள் என பிரித்து வழங்குகினர். பிளாஸ்டிக்கை ஒழிக்க அரங்கேறி தொடங்கிய முயற்சி, அதனுடன் அவர் செய்யும் விழிப்புணர்வு பாராட்டுக்குரியதாகும்.

இதையும் படிங்க: பிளாஸ்டிக் ஒழிப்பில் பங்காற்றும் பழங்குடியினர்கள்!

ABOUT THE AUTHOR

...view details