பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு எதிராக நாடு முழுவதும் பரப்புரை செய்யப்பட்டுவருகிறது. ஆனால், அதற்கான மாற்றத்தை மக்களிடையே கொண்டு சேர்க்காமல் பிளாஸ்டிக் ஒழிப்பு என்ற லட்சியத்தை அடைய முடியாது. எனவேதான், கர்நாடகாவில் உள்ள ராய்ச்சூர் மாவட்டத்தில் அரசு, அரசு பிரதிநிதிகள் ஒன்று சேர்ந்து துணி பைகளை விளம்பரப்படுத்தி வருகின்றனர். ராயச்சூரில் உள்ள சிந்தனூர் பகுதியில், நகராட்சி மன்ற உறுப்பினரான நளினி சந்திரசேகர் மெட்டி துணிப் பைகளை விநியோகித்து வருகிறார்.
இவர் தனது செந்த செலவில் ஹோசாபேட் நகரத்திலிருந்து 600 துணிப் பைகளை வாங்கி சிந்தனூர் இரண்டாம் வார்டில் வசிக்கும் மக்களுக்கு இலவசமாக வழங்கிவருகிறார். ‘நாங்கள் தூய்மையை நோக்கி நடக்கிறோம்’ என்று அச்சிடப்பட்ட வாசகத்துடன் துணிப் பைகளை நளினி விநியோகித்துவருகிறார். பிளாஸ்டிக் இல்லா வார்டை உருவாக்கும் நோக்கில் இவர் இந்த முயற்சியை தொடங்கியுள்ளார். துணிப் பைகளால் பயன்படுத்துவதால் பல நன்மைகள் விளைகிறது. பல ஆண்டுகள் பயன்படுத்தமுடிவதுடம் 10-15 கிலோ எடை கொண்ட பொருட்களை கொண்டுச் செல்வதும் துணிப்பைகளின் முக்கிய பயன்களாக பார்க்கப்படுகிறது.