காஷ்மீரில் கடந்த சில வாரங்களாகவே கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக திரிஷுல் மோர், பேட்டரி செஷ்மா, பாண்டியல் ஆகிய பகுதிகளின் நெடுஞ்சாலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் நெடுஞ்சாலையில் இருபுறமும் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் தேங்கி நின்று கொண்டிருக்கின்றன.
இது குறித்து மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அஜய் ஆனந்த் கூறுகையில், "காஷ்மீரின் ஷெர்பிபி, மூன் பாஸி, ராம்சூ, பாண்டியல், டிக்டூல் உள்ளிட்ட பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நெடுஞ்சாலையில் இருந்த சுமார் 150 வாகனங்கள் வியாழக்கிழமை (ஆக. 20) தாமதமாக அனுமதிக்கப்பட்டன.