தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜம்மு-காஷ்மீர் இனி யூனியன் பிரதேசம் ! - jammu kashmir

டெல்லி: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் காஷ்மீர், லடாக் என யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

amit

By

Published : Aug 5, 2019, 12:22 PM IST

Updated : Aug 5, 2019, 12:28 PM IST


காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பாதுகாப்புப் படையினர் ஆயிரக்கணக்கில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று மாநிலங்களவையில் காஷ்மீர் குறித்துப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து (அரசியல் அமைப்பு சட்டம்- 370 பிரிவு) உடனடியாக நீக்கப்படுகிறது என்றார்.

மேலும், அம்மாநிலம் ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுகிறது. இதில், லடாக் யூனியன் பிரதேசத்துக்கு சட்டப்பேரவை கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார்.

இதன் காரணமாக மாநிலங்களவையில் கடும் அமளி நிலவுகிறது.

Last Updated : Aug 5, 2019, 12:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details