தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜம்மு-காஷ்மீர்: இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை! - anantnag

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பிஜ்பெஹாரா (Bijbehara) நகர் பகுதியில் இரண்டு பயங்கரவாதிகள், இன்று அதிகாலை சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கோப்புப்படம்: பாதுகாப்புப் படையினர்

By

Published : Apr 25, 2019, 9:02 AM IST

Updated : Apr 25, 2019, 9:18 AM IST

ஜம்மு-காஷ்மீரின் தென் மாவட்டமான அனந்த்நாகில் அமைந்துள்ளது பிஜ்பெஹாரா நகரம்.

இங்குள்ள பேஜெண்டர் மொஹாலா (Begender Mohala) பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பாதுகாப்புப் படையினர், இன்று அதிகாலை அங்கு தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு பதுங்கியிருந்த இரண்டு பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். பதிலுக்கு பாதுகாப்புப் படையினரும் துப்பாக்கிச் சூடு நடத்த அந்த இரண்டு பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

சம்பவ இடத்திலிருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள் ஆகியவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

Last Updated : Apr 25, 2019, 9:18 AM IST

ABOUT THE AUTHOR

...view details