காஷ்மீர் மாநிலம் சந்தர்கொட் - ராஜ்கர் இணைப்புச் சாலையில் சென்று கொண்டிருந்த கார், திடீரென்று ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.இந்த விபத்தில் மூன்று குழந்தைகள், மூன்று பெண்கள் உட்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் ஐந்து பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.
காஷ்மீரில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து - 10 பேர் பலி! - கார் பள்ளத்தில் கவிழ்ந்தது
ஜம்மு காஷ்மீர்: சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து பள்ளதாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் பலியாகினர்.

ஜம்மு கஷ்மீர்
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவலர்கள், காயமைடைந்தவர்களை ரம்பன் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில் பலரது நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.