தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் துணை நிலை ஆளுநர் சிஏஜி ஆக நியமனம் - கிரிஷ் சந்திர முர்மு

டெல்லி: ஜம்மு காஷ்மீரின் முன்னாள் துணை நிலை ஆளுநர் கிரிஷ் சந்திர முர்மு தலைமைக் கணக்குத் தணிக்கையாளராக (CAG) நியமிக்கப்பட்டுள்ளார்.

சிஏஜி-யாக நியமிக்கப்பட்டுள்ள ஜம்மு காஷ்மீரின் முன்னாள் ஆளுநர் !
சிஏஜி-யாக நியமிக்கப்பட்டுள்ள ஜம்மு காஷ்மீரின் முன்னாள் ஆளுநர் !

By

Published : Aug 6, 2020, 3:19 PM IST

ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக கடந்த ஆண்டு பிரி்க்கப்பட்டது. அதன்பின் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநராக கிரிஷ் சந்திர முர்மு நியமிக்கப்பட்டார்.

துணைநிலை ஆளுநராக பத்து மாதங்கள் பணியாற்றிய ஜி.சி. முர்மு தனது பதவியை நேற்று (ஆக. 5) ராஜினாமா செய்தார். இதனையடுத்து அவரின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டுள்ளார். இந்நிலையில், மத்திய அரசின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளராக ராஜீவ் மெஹரிஷியின் பதவிக்காலம் முடிந்ததையடுத்து, அந்த பதவியில் கிரிஷ் சந்திர முர்மு நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோதும், அமித்ஷா அமைச்சராக இருந்தபோதும் இருவருடனும் மிகவும் ஜி.சி.முர்மு நெருக்கமாக பணியாற்றியவர். மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தபின் மத்திய பணிக்கு அழைக்கப்பட்ட முர்மு, மத்திய அரசின் செலவினத்துறையின் செயலராக நியமிக்கப்பட்டார். அதன்பின் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பிரி்க்கப்பட்டபின் அங்கு முதல் துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

இதையும் படிங்க...ஜம்மு-காஷ்மீரின் புதிய ஆளுநராக மனோஜ் சின்ஹா ​​நியமனம்

ABOUT THE AUTHOR

...view details