ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்து அம்மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வழிவகை செய்யும் மசோதா மாநிலங்களவையில் கடந்த திங்கள் அன்று தாக்கல் செய்யப்பட்டது. அதன்பின்னர் அடுத்த நாளே மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதாவானது, கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.
அக்டோபர் 31 முதல் யூனியன் பிரதேசங்களாகும் ஜம்மு- காஷ்மீர், லடாக் - Union Territories
டெல்லி: ஜம்மு-காஷ்மீர், லடாக் ஆகிய பகுதிகள் அக்டோபர் 31ஆம் தேதி முதல் யூனியன் பிரதேசங்களாக செயல்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்த மசோதா குறித்து நாடு முழுவதிலும் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் மத்திய அரசு மக்கள் உரிமைகளை பறித்து சர்வாதிகார ஆட்சியை பின்பற்றுவதாக விமர்சனம் செய்தனர். எனினும் ஒருசில தலைவர்கள் இந்த மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்த மசோதா குடியரசு தலைவரின் ஒப்பதலுக்கு அனுப்பப்பட்டடு, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அதற்கு அதிகாரப்பூர்வ ஒப்புதல் வழங்கினார். இதைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய பகுதிகள் அக்டோபர் 31ஆம் தேதி முதல் தனித்தனி யூனியன் பிரதேசங்களாக செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.