ஜம்மு-காஷ்மீரில் நீர் மின் திட்டத்தை செயல்படுத்த நிதி திரட்டும் வகையில், அரசுக்கு சொந்தமான நிலங்களின் உரிமையை அங்கு வாழும் மக்களுக்கு மாற்றித் தர ரோஷ்னி சட்டம் கொண்டு வரப்பட்டது. சந்தை விலையிலேயே, நிலத்தின் உரிமையை மக்களுக்கு மாற்ற இதன்கீழ் வழிவகை செய்யப்பட்டது. 2,49,999 ஏக்கர் நிலப் பகுதியின் உரிமையை மக்களுக்கு மாற்றி தருவதன் மூலம் 25,000 கோடி வருவாய் ஈட்டப்படும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இந்த நிலப்பகுதியை விற்றதன் மூலம் 76 கோடி ரூபாய் நிதி மட்டுமே அரசுக்கு கிடைத்தது சிஏஜி அறிக்கையில் தெரிய வந்தது. நிலபரப்பை மாற்ற இச்சட்டம் திட்டமிட்டு கொண்டு வரப்பட்டதாகக் கூறி, கடந்த 2018ஆம் ஆண்டு ஆளுநர் சத்யா பால் மாலிக் அதனை நீக்கினார்.