தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு: இந்திய  ஜூனியர் ஆணைய அலுவலர்  உயிரிழப்பு

ஜம்மு: எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய இளநிலை ஆணைய அலுவலர்  உயிரிழந்தார்.

jammu-and-kashmir-army-officer-killed-in-pak-firing-along-loc
jammu-and-kashmir-army-officer-killed-in-pak-firing-along-loc

By

Published : Sep 2, 2020, 6:27 PM IST

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், நவ்ஷெரா துறை கட்டுப்பாட்டுப்பகுதி அருகில் சந்தேகத்திற்கிடமான நகர்வுகள் இருப்பதை உணர்ந்த இந்திய ராணுவம் தொடர்ந்து எல்லையைத் தாண்டி, துப்பாக்கிச் சூடு நடத்தியது. பாகிஸ்தான் தாக்குதல்களுக்கு இந்திய ராணுவ வீரர்கள் கடுமையான பதிலடி கொடுத்தன.

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தின் பாலகோட் துறையில் கட்டுப்பாட்டுக் கோடு (கட்டுப்பாடு) வழியாக, பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டது. இந்தச் சம்பவத்தின்போது, ஒரு இளநிலை ஆணைய அலுவலர் தோட்டாவால் தாக்கப்பட்டு படுகாயங்களுக்கு உள்ளானார்.

இதனைத்தொடர்ந்து இந்திய ராணுவத்தின் இளநிலை ஆணைய அலுவலர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார் என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

ABOUT THE AUTHOR

...view details