ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் நூலகத்தில் படித்துக்கொண்டிருந்த மாணவர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்திய வீடியோ வெளியாகி அனைவரிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதை சுட்டிக்காட்டி காங்கிரஸ் பாஜகவை குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், அதுதொடர்பாக பாஜக செய்தித் தொடர்பாளர் ஜிவிஎல் நரசிம்ம ராவிடம் கேட்டபொழுது, "வன்முறையில் ஈடுபடும் சமூக விரோதிகளுக்கு காங்கிரஸ் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது. இப்போது நாட்டின் பாதுகாப்புப் படையினர், காவல் துறையினருக்கு எதிராகக் குரல் எழுப்பிகிறது.