தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா - போராட்டக்களமாக மாறிய பல்கலைக்கழகம்! - குடியுரிமை சட்டத் திருத்த மசோதா

டெல்லி: குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக் கழகத்தின் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

CAB stopped
CAB stopped

By

Published : Dec 13, 2019, 5:58 PM IST

இஸ்லாமிய அகதிகளுக்கு குடியுரிமை வழங்க, குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவில் வழிவகை செய்யப்படவில்லை. மதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்கும் மசோதா, அரசியலமைப்புக்கு எதிரானது எனக் கூறி எதிர்க்கட்சியினர் உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருந்தபோதிலும், 311 உறுப்பினர்களின் ஆதரவோடு மக்களவையில் டிசம்பர் 9ஆம் தேதியும் 125 உறுப்பினர்களின் ஆதரவோடு மாநிலங்களவையில் டிசம்பர் 11ஆம் தேதியும் மசோதா நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து மசோதாவை எதிர்த்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல முயற்சித்தனர். அப்போது காவல் துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதில் மாணவர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் போராட்டம்

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், ' அமைதியாக சென்ற எங்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தியதாக' குற்றம் சாட்டியுள்ளனர்.

இதையும் படிங்க: குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக வழக்கு!

ABOUT THE AUTHOR

...view details