குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர். இதில் நேற்று மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி, ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக மாணவர்கள் பேரணியாக சென்றனர்.
அப்போது அந்த பகுதிக்கு வந்த கோபால் என்ற இளைஞர் ஒருவர் சுதந்திரம் தானே வேண்டும், எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறி தான் வைத்திருந்த துப்பாக்கியை வைத்து கூட்டத்தை நோக்கி சுட்டார். இதில் மாணவர் ஒருவர் காயமடைந்தர். இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது.