குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவந்தன. கடந்த ஆண்டு, டிசம்பர் 15ஆம் தேதி டெல்லியின் பல பகுதிகளில் வன்முறைகள் வெடித்தன. இதற்கு காரணமாக பல பேர் கைது செய்யப்பட்டனர். இதனிடையே, மே 17ஆம் தேதி வன்முறையை காரணம் காட்டி, ஜாமியா பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவரான தன்ஹா கைது செய்யப்பட்டார்.
இதற்கு முன்னதாக, காவல் துறையினர் மீரான் ஹைதர், சபூரா சர்கர் ஆகியோரை உபா சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கையை ஜனநாயக விரோத செயல் என காங்கிரஸ் மூத்தத் தலைவர் சிதம்பரம் விமர்சித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து அவர் கூறுகையில், "இது கண்டனத்துக்குரியது. வழக்கு பொய்யாக கட்டமைக்கப்பட்டுள்ளது.