தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மகாராஷ்டிராவில் கார் விபத்து: 10 பேர் உயிரிழப்பு

ஜல்கான்: ஹிங்கோனா அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், சம்பவ இடத்திலேயே 10 பேர் உயிரிழந்தனர்.

Jalgaon accident
Jalgaon accident

By

Published : Feb 3, 2020, 10:35 AM IST

மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டம் ஹிங்கோனா என்ற இடத்தில், எதிர்பாராதவிதமாக இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில், சம்பவ இடத்திலேயே 10 பேர் உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த அந்நகர காவல் துறையினர், படுகாயமடைந்த ஏழு பேரை மீட்டு ஜல்கான் மருத்துவமனையில் சேர்ந்தனர்.

Jalgaon accident

ஹிங்கோனாவில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று வீடு திரும்பியபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: கொரோனா வைரஸ்: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 361 ஆக உயர்வு

ABOUT THE AUTHOR

...view details