தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துக்கு கரோனா உறுதி! - கஜேந்திர சிங் ஷெகாவத்

டெல்லி: மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஷெகாவத்
ஷெகாவத்

By

Published : Aug 20, 2020, 4:44 PM IST

மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கரோனா அறிகுறிகள் தென்பட்ட நிலையில், மருத்துவ பரிசோதனை செய்து கொண்டேன். அதில், எனக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மருத்துவர்களின் ஆலோசனைப்படி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறேன். சமீபத்தில், என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், தனிமைப்படுத்திக் கொண்டு, மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்துகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

ஆகஸ்ட் 18ஆம் தேதி, இரண்டு முக்கிய கூட்டத்தில் ஷெகாவத் பங்கேற்றார். அந்தக் கூட்டத்தில், பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங், தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி ஆகியோர் வீடியோ கான்பரன்சிங் மூலமாகவும், ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கத்தார், மத்திய இணை அமைச்சர் ரத்தன் லால் கட்டாரியா, மூத்த அலுவலர்கள் நேரிலும் பங்கேற்றிருந்தனர்.

இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீரிலிருந்து ராணுவத்தை திரும்பப் பெற்ற மத்திய அரசு!

ABOUT THE AUTHOR

...view details