தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிராந்திய ஒற்றுமை குறித்து ஆஸ்திரேலிய அமைச்சருடன் கலந்துரையாடிய ஜெய்சங்கர்! - அமைச்சர் ஜெய்சங்கர் ட்வீட்

டெல்லி: உலகளாவிய முன்னேற்றங்கள் குறித்தும், கரோனா காலத்தில் ஒன்றிணைந்து செயல்படுவது தொடர்பாகவும் ஆஸ்திரேலியா வெளியுறவுத்துறை அமைச்சருடன் விவாதித்ததாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ட்வீட் செய்துள்ளார்.

டெல்லி
டெல்லி

By

Published : Dec 1, 2020, 4:26 PM IST

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், உலகளாவிய முன்னேற்றங்கள் குறித்து ஆஸ்திரேலியா வெளியுறவுத்துறை அமைச்சர் மரைஸ் பெய்னுடன் கலந்துரையாடியுள்ளார்.

அவரின் ட்விட்டர் பதிவில், "ஆஸ்திரேலிய அமைச்சர் மரைஸ் பெய்னுடன் சற்றுமுன் கலந்துரையாடினேன். பிராந்திய மற்றும் உலகளாவிய முன்னேற்றங்கள் குறித்தும் தற்போதைய நிலைமைகள் குறித்தும் விவாதித்தோம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், மரைஸ் பெய்ன் தனது ட்விட்டரில், " அக்டோபரில் எங்கள் சந்திப்பைத் தொடர்ந்து, இன்று எனது நண்பர் எஸ்.ஜெய்சங்கருடன் முக்கியத்தவம் வாய்ந்த கலந்துரையாடலை மேற்கொண்டேன். கரோனா காலத்தில் ஒன்றிணைந்து செயல்படுவது தொடர்பாகவும் விவாதித்தோம்" எனப் பதிவிட்டுள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம், இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தில் பங்கேற்க ஜெய்சங்கர் மற்றும் பெய்ன் டோக்கியோவுக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details