வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சுப்ரமணியம், ஜம்மு - காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டிருப்பதாக உயர் அலுவலர் வட்டாரம் தகவல் தெரிவித்திருந்த நிலையில், காலையில் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தரையிறங்கிய அவர், அங்கிருந்து நேரடியாக, ஈரானில் சிக்கியிருக்கும் மாணவர்களின் குடும்பத்தினரைச் சந்திக்க சென்றார்.
முன்னதாக, ஸ்ரீநகரில் உள்ள பிராந்திய கடவுச்சீட்டு அலுவலகத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த சுமார் நூறு பெற்றோர்கள் இந்த சந்திப்பிற்காக காக்கவைக்கப்பட்டிருந்தனர்.
மாணவர்களின் பெற்றோரைச் சந்தித்த அமைச்சர் ஜெய்சங்கர் சுப்ரமணியம்,“ மாணவர்கள் பாதுகாப்பாக திரும்ப அழைத்து வரப்படுவார்கள். சுற்றுலாப் பயணிகளையும் மாணவர்களையும் மீட்டுக் கொண்டுவருவதற்கே இந்திய அரசாங்கம் முதல் முன்னுரிமை அளிக்கும். அவர்களை விரைவில் திரும்ப அழைத்து வருவதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்து வருகிறது”என்றார்.
கொரோனா அச்சுறுத்தல் : ஈரானில் சிக்கித் தவிக்கும் மாணவர்களின் பெற்றோர்களை சந்தித்த வெளியுறவுத் துறை அமைச்சர்! மருத்துவ பரிசோதனை மையங்களை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் பெற்றோர்கள் தரப்பில் இருந்து முன்வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ஆப்கானிஸ்தான் அதிபர் பதவியேற்பு விழாவில் குண்டு வெடிப்பு!