தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தூதரக உயர் ஆணையர்கள், அலுவலர்கள் சேவையை பாராட்டி விருந்து வைத்த வெளியுறவுத்துறை அமைச்சர்! - தூதரக உயர் ஆணையர்கள், அலுவலர்கள் சேவையை பாராட்டி விருந்து வைத்த வெளியுறவுத்துறை அமைச்சர்!

டெல்லி: துனிசியா, கானா, ஸ்பெயின், நைஜீரியா ஆகிய நாடுகளில் பணியாற்றிய தூதரக உயர் ஆணையர்கள் மற்றும் தூதரக அலுவலர்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மதிய விருந்தளித்து உபசரித்தார்

Jaime
ai

By

Published : Oct 23, 2020, 12:24 AM IST

துனிசியா, கானா, ஸ்பெயின் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளில் பணியாற்றிவிட்டு இந்தியா திரும்பிய தூதரக உயர் ஆணையர்கள் மற்றும் தூதரக அலுவலர்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விருந்தளித்தார்‌.

இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது ட்விட்டர் பதிவில், " துனிசியா, கானா, ஸ்பெயின் மற்றும் நைஜீரியா நாடுகளில் பணியிலிருந்து ஓய்வுபெற்ற தூதரக உயர் ஆணையர்கள் மற்றும் தூதரக அலுவலர்களுக்கு மதிய உணவு வழங்கி பிரியாவிடை வழங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர்களின் சேவைகளுக்கும் ஆதரவுக்கும் நன்றி" எனப் பதிவிட்டிருந்தார்.

மேலும் மற்றொரு பதிவில், "சமீபத்தில் வந்த ஆஸ்திரேலியா, உஸ்பெகிஸ்தான், நியூசிலாந்து, சிங்கப்பூர், ருவாண்டா, சுவிட்சர்லாந்து, மால்டா மற்றும் போட்ஸ்வானா நாடுகளின் தூதரக உயர் ஆணையர்கள் மற்றும் தூதரக அலுவலர்களை வரவேற்கிறோம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

ABOUT THE AUTHOR

...view details