தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இலங்கை வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு! - தினேஷ் குணவர்த்தனே

டெல்லி: இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தனேவுடன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

Jaishankar holds talks with Sri Lankan foreign minister
Jaishankar holds talks with Sri Lankan foreign minister

By

Published : Jan 9, 2020, 3:58 PM IST

இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தனே, மூன்று நாட்கள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார்.

அவர் இன்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். டெல்லியில் நடந்த இந்த சந்திப்பின்போது இருதரப்பு உறவுகள் குறித்து பேசப்பட்டது.

தமிழ் மக்கள் அதிகமாக வசிக்கும் தீவான இலங்கையுடன் இந்திய அரசாங்கம் நெருக்கமாக இணைந்து செயல்பட விரும்புவதாக வெளியுறவுத் துறை வட்டாரங்கள் கூறுகின்றன. கடந்த மாதம் ஜெய்சங்கர், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இந்தியாவின் முதல் வாக்காளர் நேகிக்கு சுகாதாரக் குழு மருத்துவ சிகிச்சை

ABOUT THE AUTHOR

...view details