ருவாண்டா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் வின்சென்ட் பிருட்டாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கரோனா வைரஸ் பரவல், இரு நாட்டு நல்லுறவு, காமன்வெல்த் குறித்து கலந்துரையாடினார்.
வெளிநாட்டு அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ஜெய்சங்கர்! - வெளிநாட்டு அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ஜெய்சங்கர்
ருவாண்டா, எஸ்டோனியா நாடுகளின் அமைச்சர்களுடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
இது தொடர்பாக ஜெய்சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'வின்சென்ட் பிருட்டாவுடன் நல்ல உரையாடல் அமைந்தது. இரு நாட்டுடன் இருக்கும் நல்லுணர்வு மேலும் வலுப்பெற்றுள்ளது' எனப் பதிவிட்டிருந்தார்.
இதேபோல் தனது அடுத்தப் பதிவில், 'எஸ்டோனியா நாட்டின் நிதி அமைச்சர் உர்மஸ் ரெயின்சாலுவுடன் நல்ல உரையாடல் அமைந்தது. கரோனா வைரஸ் குறித்து எனது டிஜிட்டல் முன்னெடுப்புக்கு அவர் பாராட்டியுள்ளார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் எஸ்டோனியா நாட்டுடன் சேர்ந்து பணிபுரிவதில் மிகுந்த ஆர்வமாக உள்ளேன்’ எனப் பதிவிட்டிருந்தார்.