பிரதமர் நரேந்திர மோடி அரசின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருப்பவர் ஜெய்சங்கர். இவர் குஜராத் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வானவர். இவரின் நியமனத்தை ரத்துசெய்ய வேண்டும் எனக் கூறி காங்கிரஸ் மாநில தலைவர்கள் கௌரவ் பாண்ட்யா, சந்திரிகா சூடாசாமா, பரேஷ் தனனி ஆகியோர் குஜராத் மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு கடந்த நான்காம் தேதியன்று தள்ளுபடியானது. இதனால் ஜெய்சங்கருக்கு எதிராக அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. இந்நிலையில் ஜெய்சங்கர் தனது வழக்கறிஞர் ஸ்வரூபமா சதுர்வேதி மூலமாக உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.