தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காஷ்மீருக்கு திடீர் பயணம் மேற்கொண்ட வெளியுறவுத் துறை அமைச்சர்

ஸ்ரீ நகர்: வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் திட்டமிடாத வகையில் ஜம்மு காஷ்மீரில் உள்ள 'தால் ஏரி' பகுதிக்குப் பயணம் மேற்கொண்டார்.

EAM
EAM

By

Published : Mar 9, 2020, 3:25 PM IST

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு இன்று திடீர் பயணம் மேற்கொண்டார். அங்கு ஸ்ரீநகர் அருகேயுள்ள தால் ஏரி பகுதிக்குப் பயணம் மேற்கொண்ட அவர் அங்குள்ள கடவுச்சீட்டு அலுவலகத்தைப் பார்வையிட்டார்.

அதன்பின்னர் வடக்கு காஷ்மீர் பகுதியில் உள்ள பாரமுல்லா மாவட்டத்தின் கடவுச்சீட்டு அலுவலகத்திற்கு அவர் செல்லவுள்ளதாகவும் வெளியுறவுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காஷ்மீர் வந்துள்ள ஈரானைச் சேர்ந்த மாணவர்கள் கொரோனா தொடர்பான அச்சம் காரணமாக அங்கு சிக்கியுள்ளதாகவும், அவர்களை ஈரானுக்கு திருப்பி அனுப்ப இந்தியா உதவ வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகின.

அவர்களைச் சந்தித்து விரைந்து நாட்டிற்கு அனுப்பிவைக்கும் நோக்கில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இந்தத் திடீர் பயணத்தை மேற்கொண்டுள்ளார் என வெளியுறவுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஈரானில் கொரோனா நோய் பாதிப்புக் காரணமாக நேற்று ஒரேநாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கொரோனா வைரஸ்: களமிறங்கிய உலக சுகாதார அமைப்பு!

ABOUT THE AUTHOR

...view details