மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பல்வேறு துறைகளில் இருநாட்டு ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக ஓமன் வெளியுறவுத்துறை அமைச்சர் பத்ர் அல்புசைடியுடன் கலந்துரையாடியுள்ளார்.
இருநாட்டு ஒத்துழைப்பு குறித்து ஓமன் அமைச்சருடன் கலந்துரையாடிய ஜெய்சங்கர்! - அமைச்சர் ஜெய்சங்கரின் ட்விட்டர் பதிவு
டெல்லி: சுகாதார மற்றும் உணவு பாதுகாப்பு துறைகளில் இருநாட்டு ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக ஓமன் வெளியுறவுத்துறை அமைச்சருடன் விவாதித்ததாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ட்வீட் செய்துள்ளார்.
ஓமன்
இதுகுறித்து அமைச்சர் ஜெய்சங்கரின் ட்விட்டர் பதிவில், "ஓமன் வெளியுறவுத்துறை அமைச்சர் பத்ர் அல்புசைடியுடன் கலந்துரையாடியதில் மகிழ்ச்சியடைகிறேன்.
கரோனா காலக்கட்டத்தில் இந்தியா கவனித்துக்கொண்ட விதத்தை பாராட்டினார். மேலும், சுகாதார பாதுகாப்பு மற்றும் உணவு பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்னைகள் குறித்த கருத்துகளைப் பகிர்ந்துக் கொண்டோம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.