ஜெய்சல்மர்:இந்தியா- பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் அமைந்துள்ளது. அங்கு ஊடுருவல், கடத்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் நடைபெறும் வகையில் சந்தேகிக்கப்படுவதால் இரவு நேரம் மக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய எல்லைக்குள் பாகிஸ்தானின் உள்ளுர் சிம் கார்டுகளின் புழக்கத்தை கட்டுப்படுத்துவது போன்ற பொது நடவடிக்கைகளை தடை செய்வதற்காகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தியா பாகிஸ்தான் எல்லையில் 5 கி.மீ தூரத்தில் வாழும் மக்கள் மாலை 6 மணி முதல் காலை 7 மணி வரை செப்டம்பர் 27ம் தேதி வரை நடமாட தடை விதித்து மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் மோடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஜெய்சல்மர் எல்லைப் பகுதியில் இரவு நேர நடமாட்டத்துக்கு தடை! அவசர தேவைக்கு மாவட்ட நிர்வாகத்திடம் முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்லைக்கு அருகே அமைந்துள்ள தொலைபேசி சாவடிகளில் அழைப்புகளை கட்டாயம் பதிவு செய்யவும் இந்த உத்தரவில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகளை மீறும் வகையில் செயல்படுபவர்கள் மீது, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 188 ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.