இதுகுறித்து சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு ஜெய்ராம் ரமேஷ் எழுதியுள்ள கடிதத்தில், "ஊரடங்கு காலத்தில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இந்த நடவடிக்கைகள் கேட்டு மிகவும் துயரத்திற்குள்ளாகியுள்ளோம். ஆனால், ஆச்சரியப்படவில்லை.
இந்த உலகம் கண்டுவரும் சுகாதாரப் பேரிடர், வரப்போகும் சுற்றுச்சூழலின் பேரிடருக்கு அறிகுறியாய் அமைந்துள்ளது. நாம் ஆழ்ந்து சிந்திக்க, நமக்குக் கிடைத்திருக்கும் பொன்னான வாய்ப்பு இது.