தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

’தேவையில்லாமல் வெளியே வந்தா இந்த பாட்ட ரீப்பிட்டடா கேட்பீங்க’ - காவல் துறையின் கொடூர அறிவிப்பு! - மசக்கலி பாடல்

தேசிய ஊரடங்கில் தேவையில்லாமல் வெளியே நடமாடுபவர்களை 'மசக்கலி 2' பாடலை ரீப்பிட் மோடில் கேட்கவைக்கப்படும் என காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Jaipur police
Jaipur police

By

Published : Apr 12, 2020, 9:59 AM IST

அபிஷேக் பச்சன் - சோனம் கபூர் நடிப்பில் ஓம் பிரகாஷ் இயக்கத்தில் 2009ஆம் ஆண்டு வெளியானப்படம் 'டெல்லி 6'. இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம் பெற்ற 'மசக்கலி' பாடல் இந்தி தெரியாதவர்களுக்கும் மிகப்பிரபலமானப் பாடலாக மாறியது.

இப்பாடலை சமீபத்தில் 'மசக்கலி 2' என தலைப்பிட்டு டீ - சீரிஸ் ரீமேக் வெளியிட்டது. இந்த வீடியோவில் சித்தார்த் மல்ஹோத்ராவும் தாரா சுதாரியாவும் நடித்துள்ளனர்.

இப்பாடல் வெளியான சில மணி நேரத்திலேயே இப்பாடல் மசக்கலி பாடலை கேவலப்படுத்திவிட்டதாக சமூகவலைதளத்தில் நெட்டிசன்கள் கூறிவந்தனர். இதனையடுத்து ஏ.ஆர் ரஹ்மானும் தனது ட்விட்டர் பக்கத்தில், "குறுக்கு வழி கிடையாது. 200க்கும் மேற்பட்ட இசையமைப்பாளர்கள் ஒரு தலைமுறையினருக்கு 365 நாட்களும் கேட்கும்படியாக ஒரு இசையை கொடுக்க மிகவும் கடினமாக உழைத்தோம். பாடல் வரிகளை மாற்றிக்கொண்டே இருந்தோம். எனினும் இப்பாடல் உருவாகக் காரணமாக இருந்த குழுவினருக்கு அன்பும் பிராத்தணையும் உண்டு" என தெரிவித்து உண்மையான மசக்கலி பாடலின் லிங்கை பதிவிட்டிருந்தார். அதே போல் தனது இன்ஸ்டாகிராமிலும் "கோபத்தை அடக்க தெரிந்தவனே சிறந்த மனிதன்" என்றும் பதிவிட்டிருந்தார்.

தற்போது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் காவல் துறையினர் ஒருபடி மேலே சென்று தனது ட்விட்டர் பக்கத்தில், "ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்போது வெளியே நடமாடுபவர்களை ஒரு அறையில் அமரவைத்து 'மசக்கலி 2' ரீமிக்ஸ் பாடலை தொடர்ந்து அவர்களை கேட்க வைப்போம்" என ட்வீட் செய்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details