அசர்பைஜானில் உள்ள பகு நகரத்தில் உலக பாரம்பரியமிக்க மையத்தின் 43ஆவது சந்திப்பு நடந்தது. இதில், இந்தியாவின் பிங் சிட்டி என்றழைக்கப்படும் ஜெய்பூர், உலக பாரம்பரியமிக்க சுற்றுலா தலமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
உலக பாரம்பரியமிக்க நகரமாக ஜெய்ப்பூர் அறிவிப்பு! - ஜெய்பூர்
பகு: இந்தியாவில் உள்ள ஜெய்ப்பூர் நகரத்தை உலக பாரம்பரியமிக்க சுற்றுலா தலமாக யுனெஸ்கோ அமைப்பு அறிவித்துள்ளது.
Unesco
1876ஆம் ஆண்டு வேல்ஸ் இளவரசரும், விக்டோரியா மகாராணியும் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டனர். அப்போது அவர்களை வரவேற்க ஜெய்ப்பூர் மகாராஜா ராம் சிங் முழு நகரத்தையும் பிங் நிறத்தில் வண்ணம் தீட்டினார். இதனால் 'ஜெய்ப்பூர் பிங் சிட்டி' என அழைக்கப்பட்டு வருகிறது.