தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 14, 2020, 2:51 PM IST

ETV Bharat / bharat

சுயநினைவிழந்த புரட்சிகர கவிஞர் வரவர ராவ் - இப்போதாவது பிணை வழங்குமா அரசு?

மும்பை : புரட்சிகர கவிஞர் வரவர ராவ் (81) சிறையில் சுயநினைவிழந்த நிலையில் மும்பை ஜே.ஜே. அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுயநினைவிழந்த புரட்சிகர கவிஞர் வரவர ராவ் - இப்பொழுதாவது பிணை வழங்குமா அரசு ?
சுயநினைவிழந்த புரட்சிகர கவிஞர் வரவர ராவ் - இப்பொழுதாவது பிணை வழங்குமா அரசு ?

கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற பீமா கொரேகான் கலவரம் தொடர்பான சதி வழக்கின் கீழ் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த புரட்சிகர கவிஞரும், சமூக செயல்பாட்டாளருமான வரவர ராவ் உள்ளிட்ட 11 சமூகச் செயற்பாட்டாளர்கள் பொய்க் குற்றச்சாட்டுகளின் பெயரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மாவோயிஸ்ட்டுகள் உடனிணைந்து சதித்திட்டம் தீட்டியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட வரவர ராவை, மும்பை தலோஜா சிறையில் அடைத்துள்ளதுதேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ).

கரோனா பாதிப்பு தீவிரமாக பரவிவரும் மும்பை பெருநகரில் சிறைப்படுத்தப்பட்டுள்ள வரவர ராவை, வயதைக் கணக்கில் கொண்டு பிணையில் விடுமாறு அவரது குடும்பத்தினர் தொடர்ந்து ஐந்து முறை நீதிமன்றத்தில் முறையிட்டும், என்.ஐ.ஏ எதிர்ப்புத் தெரிவித்ததால் மும்பை நீதிமன்றம் அடுத்தடுத்து பிணையைமறுத்துள்ளதாக அறிய முடிகிறது.

கடந்த மே 28ஆம் தேதி கவிஞர் வரவர ராவ் சிறையில் மயக்கமடைந்து கீழே விழுந்ததையடுத்து, அவரை மும்பை ஜே.ஜே. அரசு மருத்துவமனையில் சிறை நிர்வாகம் சிகிச்சைக்காக அனுமதித்தது. அவரது உடல்நிலையை சுட்டிக் காட்டி அவருக்கு பிணை வழங்குமாறு அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்தபோது, அவருக்கு உடல்நிலை சரியாகிவிட்டது என்று கூறி அவரை காவல்துறையினர் மீண்டும் சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில், ஜூலை 11ஆம் தேதி உடல்நிலை மேலும் மோசமாகி சுயநினைவிழந்த நிலையில் கீழ விழுந்துள்ளார். இதனையடுத்து அவரை சிறை நிர்வாகம் மும்பை ஜே.ஜே. மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக அவரது வழக்குரைஞர் சத்தியநாராணன் ஐயர் தெரிவித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), விசிக, திமுக, காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதாதளம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மராட்டிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு பீமா கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் வரவர ராவ் உள்ளிட்ட அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கடிதம் எழுதியுள்ளனர்.

கடந்த 22 மாதங்களாக விசாரணைக் கைதிகளாக சிறையிலடைக்கப்பட்டுள்ள பீமா கொரேகான் வழக்கின் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யக் கோரி உலகம் முழுவதும் உள்ள ஜனநாயகவாதிகளும் முற்போக்காளர்களும் மத்திய அரசை வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details