கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய நோபல் பரிசு பெற்றவரும், பிரபல பொருளாதார வல்லுநருமான அமர்த்தியா சென், ஜெய் ஸ்ரீராம் என்ற முழக்கத்தின் பெயரில் பொதுமக்கள் துன்புறுத்தப்படுவதாக குற்றம்சாட்டினார்.
மேற்கு வங்கத்தில் 'ஜெய் ஸ்ரீராம்' என்பதே கிடையாது - அமர்த்தியா சென் - jai sriram
கொல்கத்தா: ஜெய் ஸ்ரீராம் என்ற முழக்கம் மேற்கு வங்கத்தில் கிடையவே கிடையாது என நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுநர் அமர்த்தியா சென் கூறியுள்ளார்.
அமர்த்தியா சென்
மேலும், மேற்கு வங்கத்தில் ‘மா துர்கா’ என்ற முழக்கத்தையே தான் கேட்டிருப்பதாகவும், ‘ஜெய் ஸ்ரீராம்’ என ஒரு முழக்கமே இங்கு இல்லை என்றும் கூறியுள்ளார். அதற்கு எடுத்துக்காட்டாக தனது பேரக்குழந்தையை சுட்டிக்காட்டிய அவர், ‘எனது நான்கு வயது பேரக்குழந்தையிடம் அவளுக்கு பிடித்த தெய்வம் யார்?’ என்று கேட்டபோது, ‘மா துர்கா’ என்று அவர் பதிலளித்ததாகவும் கூறியுள்ளார்.